காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம். சீனாவுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம். சீனாவுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் தலையீடு தேவையில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை இந்தியாவும், பாகிஸ்தானும். ஆனால் அவர்களுக்கு இடையேயான காஷ்மீர் விவகாரம் தான் சர்ச்சைக்குள்ளான விஷயம். இதனால் ஆசியாவின் அமைதி சீர்குலைவதாகவும், அதனை சரிசெய்ய நாங்கள் தயாராக இருப்பதாகவும் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென்ங் ஷனாங் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை தூண்டிவிடுவது பாகிஸ்தான்.

அதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் காஷ்மீர் விவகாரம். எந்தப் பகுதியில் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ, அங்கு அமைதி சீர்குலைகிறது. ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் இதுபற்றி ஆலோசனை நடத்தினர். தூதரக ரீதியில் காஷ்மீர் விவகாரம் குறித்து, பேச்சுவார்த்தை நடத்த வழிமுறைகள் இருப்பதாக சுட்டிக் காட்டினார். அதனால் சீனாவின் தலையீடு தங்களுக்கு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply