உலக அளவில் பாதுகாப்பான முதலீட்டுக்கு சிறந்த நாடுகள் குறித்த பட்டியல் ஒன்றை பிரபல நிறுவனம் ஒன்று எடுத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
உலக அளவில் பிரபலமான கன்சல்டன்ஸி சர்வீஸ் நிறுவனமான EY என்ற நிறுவனம் உலக அளவில் முதலீடு செய்வதற்கு சிறந்த பாதுகாப்பான நாடுகள் என்ற ஆய்வின் முடிவை இன்று அறிவித்தது. இந்த முடிவின்படி இந்தியாவில் அடுத்து வரும் மாதங்களில் நிலையான அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் நிலவும் என்றும் அதனால் இந்தியாவில் முதலீடு செய்வது மற்ற நாடுகளில் முதலீடு செய்வதைவிட பாதுகாப்பானது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அரசியல் நிலைத் தன்மை, வணிக நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு உள்ளிட்டவை அடிப்படையில் இந்தியாவுக்கு இச்சிறப்பிடம் கிடைத்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மோடி பிரதமர் ஆன பின்னர் இந்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.