இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி. இக்கட்டான நிலையில் இந்தியா.

Britain England India Cricket
இங்கிலாந்துக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாளான இன்று இந்திய அணி வெற்றி பெற 333 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கைவசம் ஆறு விக்கெட்டுக்களே உள்ள நிலையில் இந்திய அணி இன்று அனைத்து விக்கெட்டுக்களை இழந்துவிட்டால் தோல்வியுறும் அபாயமும் உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 569 மற்றும் 205 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 122 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 333 ரன்கள் எடுக்கவேண்டும். டிரா செய்ய அனைத்து விக்கெட்டுக்களையும் இழக்காமல் இருக்கவேண்டும். இதனால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, இந்த டெஸ்ட்டை வெற்றி பெற இன்று அதிரடியாக பந்துவீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply