சீனாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்தியாவின் பெல் நிறுவனம்

சீனாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்தியாவின் பெல் நிறுவனம்

bhelஇந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை உள்பட ஒருசில நாடுகளின் வளர்ச்சி திட்டங்களை சீனா முன்னெடுத்து நடத்தி இந்தியாவை நெருக்கடிக்கு ஆளாக்கி வரும் நிலையில் வங்கதேசத்தில் உள்ள ஒரு முக்கிய மின் திட்டத்தை கைப்பற்றும் போட்டியில் சீனா தோல்வி அடைந்துள்ளது.

வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள குல்னா என்ற பகுதியில் 1,320 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க கோரப்பட்ட டெண்டரை கைப்பற்ற இந்தியாவின் பெல் நிறுவனத்திற்கும், சீனாவின் ஹார்பின் எலக்ட்ரிக் சர்வதேச கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் இடையே கடுமையான கடும் போட்டி இருந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் பெல் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

சுமார் ரூ.10,000 கோடி மதிப்பு கொண்ட இந்த திட்டத்தை இந்தியாவின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பி.எச்.இ.எல்) கைப்பற்றியுள்ளதை இரு நாட்டு உயர் அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

வங்கதேசத்தின் இந்த முக்கிய மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிடம் சீனா இழந்திருப்பது அந்நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே உலக நாடுகள் கருதி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply