தவான் அபார சதம். வலுவான நிலையில் இந்தியா

dawanஇந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் நேற்று வங்கதேசத்தில் ஃபதுல்லா நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் முரளிவிஜய் ஆகிய இருவரும் வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆட்டத்தின் இடையிடையே மழை குறுக்கிட்டாலும் ஆட்ட நேர முடிவுல் தவான் 150 ரன்களும், முரளி விஜய் 89 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 56 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் குவித்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜன்சிங் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply