இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விரோத் கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி தொடங்கிய 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 572 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததார். ஆனாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராஹுல் நிதானமாக விளையாடி சதமடித்தார். ரோஹித் சர்மா 53 ரன்களும், விராத் கோஹ்லி 140 ரன்களும் எடுத்துள்ளனர்.
இன்றைய ஆட்டநேர முடிவின்போது இந்திய அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோஹ்லி 140 ரன்களுடனும், சாஹா 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி தற்போது 230 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டமே உள்ள நிலையில் இன்னும் முதல் இன்னிங்ஸ் கூட முடிவு பெறவில்லை என்பதால் இந்த டெஸ்ட் டிராவை நோக்கி செல்வதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர்.