இந்தியாவின் சாதனை தொடர்கிறது. 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற சாதனை தொடர்கிறது. உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முக்கிய போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது.
நேற்றைய ஆட்டம் தொடங்கும் முன் மழை பெய்ததால் இந்த போட்டி 18 ஓவர்கள் கொண்ட போட்டியாம மாற்றப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கிய இந்திய அணி முதலில் கொஞ்சம் தடுமாறி 3 விக்கெட்டுக்களை இழந்தாலும், விரோத் கோஹ்லியின் அதிரடியால் 15.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 55 ரன்கள் எடுத்த விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் இந்திய அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளது.
Chennai Today News: India v Pakistan India won by 6 wickets with 13 balls remaining