மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம். இந்தியா உள்பட 34 நாடுகள் எதிர்த்து வாக்கு.

death penaltyஐ.நா. பொதுச்சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிர்த்து வாக்களித்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றது.

உலகில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக இருந்து வரும் நிலையில் ஐ.நா.சபையில்  மரண தண்டனை விதிப்பதில் கட்டுப்பாடு வேண்டும் என்பதை வலியுறுத்தி இயற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 36 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. ஆனால் அதேசமயத்தில் இந்த தீர்மானத்தை ஆதரித்து 114 நாடுகள் வாக்கு அளித்தன

இதுகுறித்து ஐ.நா. சபைக்கான இந்திய குழுவின் செயலாளர் மாயங் ஜோஷி கூறும்போது, ”ஒவ்வொரு நாட்டுக்கும் தனது சட்ட திட்டங்களின்படி குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமை உள்ளது. இந்த அடிப்படை இறையாண்மை உரிமையை அங்கீகரிக்க இந்த தீர்மானம் தவறி விட்டது. இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

சமுதாயத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கொடூர குற்றங்களை செய்தவர்களுக்குத்தான் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களுக்கும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட சட்ட ரீதியிலான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன” என்றார்

மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிர்த்து வாக்களித்ததை எதிர்க்கட்சிகள் குற்றம் கூறியுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி இதுகுறித்து ‘மரண தண்டனையை முற்றிலுமாகச் சட்ட நூலிலிருந்து அகற்றிவிட வேண்டுமென்று தி.மு.கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

Leave a Reply