இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடக்கம்
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி அந்நாட்டின் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. வங்காளதேசம் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளதால் இந்த தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் தோனி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்.
இந்த தொடரில் ஐந்து ஒருநாள் போட்டிகளும் மூன்று 20ஓவர் போட்டிகளும் நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் தற்போது இந்திய அணி 114 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தொடர்ந்து 2-வது இடத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் குறைந்தது ஒரு ஆட்டத்திலாவது வெற்றி பெற்றாக வேண்டும். ஒருவேளை அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தால் 111 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு தள்ளப்படும். மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு வந்துவிடும்.
அதே நேரத்தில் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்கூட இந்திய அணி முதலிடத்தை அடைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விபரங்கள்
இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, வீராட் கோலி, ரகானே, மனிஷ் பாண்டே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, அக்ஷர் படேல், குர்கெரத்சிங், பரீந்தர் சரண்.
ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன் பிஞ்ச், பெய்லி, மேக்ஸ்வெல், மிக்செல் மார்ஷ், மேத்யூ வாடே, கானே ரிச்சர்ட்சன், ஷான் மார்ஷ், பல்க்னெர், ஹாசல்வுட், ஸ்காட் போலண்ட், ஜோயல் போரிஸ்.