இந்தியாவை வெல்ல வார்த்தை போரும் தேவை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முதல் போட்டியை வரும் 23ஆம் தேதி விளையாடுகிறது. துபாயில் பயிற்சி பெற்று புத்துணர்ச்சியுடன் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இம்முறையாவது தொடரை வென்று நாடு திரும்ப வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியை வெற்றி பெற களத்தில் திறமையோடு விளையாடினால் மட்டும் போதாது, அவ்வப்போது வார்த்தை போரிலும் விளையாட வேண்டும் என்றும் அதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2008-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டியது. ஹர்பஜன் சிங் – சைமண்ட்ஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில் ஹர்பஜன் சிங் குரங்கு என்று திட்டியதாக பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் 2015-ம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா சென்றிருக்கும்போது விராட் கோலியை நோக்கி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.