வெற்றியை நோக்கி இந்திய அணி. தாக்கு பிடிக்குமா வங்கதேசம்?
வங்கதேச கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வங்கதேசம் 388 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் ஆனபோதிலும் மீண்டும் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து மீண்டும் டிக்ளேர் செய்தது.
இதனால் வெற்றி பெற 459 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்ட முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்றைய கடைசி நாளில் வெற்றி பெற 356 ரன்கள் எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 7 விக்கெட்டுக்கள் தேவையாக உள்ளது. கடைசி நாள் என்பது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்