இந்திய , நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது ஹாமில்டன் நகரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 33.2 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் எடுத்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்திய, நியூசிலாந்து அணிகள் ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இன்று நடந்துவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச இந்திய கேப்டன் தோனி முடிவு செய்தார்.
இன்றைய ஆட்டம் மழையால் தடைபெற்ற நேரத்தில் நியூசிலாந்து அணி வில்லியம்ஸ் 76 ரன்களுடனும், டெய்லர் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை தொடரும் பட்சத்தில் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூறினர்.