இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்கள் குவித்துள்ளது. அபாரமாக விளையாடிய ரஹானே சதம் அடித்தார்.
முன்னதாக நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி நேற்றைய ஆட்டம் நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய ஆட்டம் தொடங்கியவுடன் அடித்து ஆடிய இந்திய வீரர்கள், முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்து 246 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவின்போது 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 222 ரன்கள் பின்னடைவில் இருக்கும் நியூசிலாந்து அணி விரைவில் ஆட்டமிழக்கும் பட்சத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியடைய வாய்ப்புள்ளது.