இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்துவரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளான இன்று நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் குவித்தது.
நேற்று 143 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த மெக்கல்லம் இன்று தனது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். 224 ரன்கள் குவித்த மெக்கல்லம், இஷாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து நிற்காததால், நியூசிலாந்து அணி 121.4 ஓவர்களில் 503 ரன்கள் குவித்தது.
அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே தவான், புஜாரே ஆகிய இரண்டு விக்கெட்டுக்கள் விழுந்தன. அதனால் இந்திய அணி தடுமாறியபடி ரன் எடுத்தது. அடுத்தடுத்த இடைவெளியில் நான்கு விக்கெட்டுக்களை தத்தளித்த இந்தியா, ஆட்ட நேர முடிவில் 130 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 373 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் முக்கிய விக்கெட்டுக்களையும் இழந்த இந்திய அணி, நாளை என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் இரண்டு விக்கெட்டுக்களையும் வாக்னர் மற்றும் செளத்தி ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.