இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, தற்போது பரபரப்பான கட்டத்திற்கு வந்துள்ளது. இந்திய அணி போட்டியில் வெற்றி பெற 407 ரன்கள் இலக்கு என நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி தொடங்கிய முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 503 ரன்கள் குவித்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் படு சொதப்பலாக விளையாடி வெறும் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் எடுத்தது போக இந்த போட்டியில் வெற்றி பெற 407 ரன்கள் எடுக்கவேண்டும். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 9 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 320 ரன்கள் இருக்கவேண்டும். தவான் 49 ரன்களுடனும், புஜாரெ 22 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முரளிவிஜய் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இன்னும் இரண்டு நாட்கள் போட்டி நடக்க இருப்பதால், இந்த போட்டி கண்டிப்பாக முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.