இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட். நாளை கான்பூர் மைதானத்தில் தொடக்கம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
விராட்கோலி கேப்டனாக செயல்படும் இந்திய அணியில் ஷிகார் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்களும், வீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
அதேபோல் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் தலைமையில் மார்டின் குப்தில், டாம் லதம், ரோஸ் டெய்லர், நிக்கோலஸ், ரோஞ்சி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், போல்ட், மெட்ஹென்றி, மிச்செல் சான்ப்ரா, சோதி, வாக்னர், மார்க் கிரேக் போன்ற பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் மோதுவது 55-வது முறையாக ஆகும். இதுவரை மோதியுள்ள 54 போட்டியில் இந்தியா 18 ஆட்டத்திலும் நியூசிலாந்து 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. 26 போட்டி டிரா ஆனது.
இந்த போட்டி இந்திய அணியின் 500வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.