இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 0-2 என்ற கணக்கில் தோற்றது.
அஷ்வின் ஆல் ரவுண்டராக இருப்பது கேப்டன் டோனிக்கு சாதகமான அம்சம். ஏழு பேட்ஸ்மேன், 4 வேகம் + ஒரு சுழல் என வியூகம் அமைக்க இது உதவும். டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் அஷ்வின் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜாகீரின் அனுபவ வேகத்துடன் இஷாந்த், உமேஷ், ஷமி இணைந்து மிரட்டினால், தென் ஆப்ரிகிக்க பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தலாம். அதே சமயம், வேகத்துக்கு சாதகமான ஆடுகளங்கள், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. வலுவான அணிகள் மோதும் இந்த போட்டி, சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.