நாளை முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவில் தொடருமா இந்திய அணியின் வெற்றி

நாளை முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவில் தொடருமா இந்திய அணியின் வெற்றி

வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிலும் வெற்றியை தொடருமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது. இலங்கையை மட்டும் 3 தடவை (2-1, 3-0, 1-0) வென்றது. தென் ஆப்பிரிக்கா (3-0), வெஸ்ட்இண்டீஸ் (2-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (3-0), வங்காள தேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) ஆகிய அணிகளுக்கு எதிராக வென்றது. இந்த 9 தொடர் இந்திய மண்ணில் 6, வெளிநாட்டில் 3-யை (இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்) கொண்டது. கடந்த 10 தொடரில் விளையாடிய இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்த சாதனையை நீட்டித்துக் கொள்ள கடுமையாக போராட வேண்டும்.

நாளைய போட்டியில் விளையாடும் இரு நாட்டு அணி வீரர்கள்:

இந்திய வீரர்:- வீராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, விர்த்திமான் சகா, அஸ்வின், புவனேஷ்குமார், உமேஷ் யாதவ், இஷாந்த்சர்மா, முகமது ‌ஷமி, பும்ரா, தவான், ரோகித் சர்மா, ஜடேஜா, பார்த்திவ் பட்டேல்.

தென் ஆப்பிரிக்கா:- டுபெலிசிஸ் (கேப்டன்), எல்கர், மார்கிராம், டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, புவுமா, குயின்டன், டிகாக், பிலாண்டர், ரபடா, மார்னே மார்கல், கேசவ்மகராஜ், கிறிஸ்மோரிஸ், புருயின், ஸ்டெயின், பெலுகுவாயோ.

Leave a Reply