தீவிரவாதம் குறித்து மட்டுமே பேசுவதா? இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

தீவிரவாதம் குறித்து மட்டுமே பேசுவதா? இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

india pakistanஇந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள உறவை சரி செய்யவே பாகிஸ்தான் விரும்புவதாகவும் ஆனால் இந்தியா தீவிரவாதம் குறித்து மட்டுமே பேச முன் வருவதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் செயலாளர் அஜிஸ் அகமது சவுத்ரி ஆகியோர்களின் சந்திப்பு கட்நத 26ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பின்னர் ஐ.நா.,விற்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி மலீலோதி செய்தியாளர்களிடம் கூறியபோது, “பாகிஸ்தான் அரசு தொடர்ந்து இந்தியாவை வலியுறுத்தி வருகிறது. பெரிய அளவிலான அமைதி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலையில், இந்தியா இன்னும் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் அதற்கு பதிலாக தீவிரவாதம் குறித்து மட்டும் பேச விரும்புகிறது.

பொருளாதார வளர்ச்சி, தீவிரவாதத்தை தோற்கடித்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதத்தை முறியடித்தல் உள்பட அனைத்து விவகாரங்களுக்கும் பாகிஸ்தான் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த முக்கியத்துவத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply