சர்வதேச நிதியத்தின் டாப்-10 பட்டியலில் விரைவில் இணைகிறது இந்தியா
International Monetary Fund என்று கூறப்படும் சர்வதேச நிதியத்தின் டாப்-10 உறுப்பினர்களில் ஒன்றாக இந்தியா விரைவில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதியத்தில் தற்போது வளர்ச்சி அடைத நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிதியத்தில் மொத்தம் 188 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தபோதிலும் டாப்-10 பட்டியலில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து என பெரிய ஐரோப்பிய நாடுகள் மட்டுமே தற்போது இணைந்துள்ளது.
ஆனால் விரைவில் டாப்-10 பட்டியலில் வளர்ந்து வரும் நான்கு முக்கிய பொருளாதார நாடுகளான பிரேசில், சீனா, இந்தியா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளும் இணையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.