63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: தொடரை இழந்தாலும் நிமிர்ந்து நிற்கும் விராத் கோஹ்லி
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
வெற்றி பெற 240 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியை இந்திய பவுலர்கள் 177 ரன்களில் சுருட்டியதால் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் முகமது ஷமி 5 விக்கெட்டுக்களையும் பும்ரா, இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுக்களையும் புவனேஷ்குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
ஏழு வருடங்களுக்கு பின் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா பெறும் வெற்றி இது என்பதும் இந்த வெற்றியின் மூலம் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 21 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக புவனேஷ் குமாரும், தொடர் நாயகனாஅக ஃபிலாண்டரும் தேர்வு செய்யப்பட்டனர்