133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி. சுரேஷ் ரெய்னா சதம்.

cricketநேற்று நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் குக், இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கினர்.

நேற்றைய போட்டியில் விராத் கோஹ்லி வழக்கம்போல ஏமாற்றினாலும் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோர் மிக அபாரமாக பேட்டிங் செய்தனர். ரோஹித் சர்மா 52 ரன்களும், சுரேஷ் ரெய்னா 100 ரன்களும், கேப்டன் தோனி தனது அதிரடியினால் 52 ரன்களும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 304 ரன்கள் குவித்தது.

305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மழை குறுக்கிட்டதால் 47 ஓவர்களில் 295 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சொதப்பலாக பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆட்டநாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி நாட்டிங்ஹாம் நகரில் நடைபெறும்.

Leave a Reply