இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட். 246 ரன்களின் இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது,. இந்த வெற்றியால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 455 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 204 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 255 ரன்கள் எடுத்திருந்ததால் அந்த அணி வெற்றி பெற 405 ரன்கள் தேவையாக இருந்தது
இந்நிலையில் இன்று தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அஸ்வின், யாதவ் பந்துவீச்சுக்கு 158 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா அபார வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.