ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
cricket1
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல்பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தபோதிலும், இந்தியாவிடம் பாகிஸ்தான் சரண் அடைந்து விறுவிறுப்பின்றி போட்டி முடிந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் அபார பந்துவீச்சில் கேப்டன் அப்ரிடி முதல் பல பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினர்

85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுக்கள் பறிபோயின. ஆனால் விராத்கோஹ்லி சுதாரித்து விளையாடி இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் இந்தியா 15.3 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 49 ரன்கள் எடுத்த விராத் கோஹ்லி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Leave a Reply