சாஹல் அபார பந்துவீச்சு. இங்கிலாந்தின் ஆறு டக்-அவுட். தொடரை வென்|றது இந்தியா

சாஹல் அபார பந்துவீச்சு. இங்கிலாந்தின் ஆறு டக்-அவுட். தொடரை வென்|றது இந்தியா

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் போட்டி தொடர்களை ஏற்கனவே கைப்பற்றியுள்ள விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது டி-20 தொடரையும் கைப்பற்றி சாதனை செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. தோனி 56 ரன்களும், ரெய்னா 63 ரன்களும் எடுத்தனர்.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அடித்து ஆடினாலும் சாஹலின் அபார பந்துவீச்சில் 127 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். இதனால் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது. சாஹல் ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

Leave a Reply