2வது டி-20 போட்டி. இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி-20 போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் மிக அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி இந்திய பந்துவீச்சாளர்களுன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களீல் 9 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 99 ரன்களை மட்டுமே எடுத்தது.
100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 13.1 ஓவர்களில் விக்கெட் இழப்பிறி 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களாகிய ராகுல் மற்றும் மந்தீப் சிங் ஆகியோர் தலா 47 மற்றும் 52 ரன்கள் எடுத்தனர். 4விக்கெட்டுக்களை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.