நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளையும் இழந்த நியூசிலாந்து இன்று இந்தியாவுடன் முதல் ஒருநாள் போட்டியில் மோதியது.
தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 43.5 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் லாத்தம் 79 ரன்களும், செளத்தி 55 ரன்களும் எடுத்தனர்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 33.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி வழக்கம்போல அதிரடியாக விளையாடி 85 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய பாண்டே ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.