பெங்களூர் டெஸ்ட் போட்டி. இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து விளையாடி 274 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 276 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 188 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் விளையாடியது
இந்நிலையில் அஸ்வின் மற்றும் யாதவ் ஆகியோர்களின் அபார பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது.