வங்கதேச அணியை துவைத்து காயப்போட்ட இந்தியா! மீண்டும் இந்தியா-பாகிஸ்தான்
சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று பிர்மிங்காம் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்தியாவை எதிர்த்து வங்கதேசம் விளையாடியது.
போட்டி ஆரம்பிக்கும் முன்னர் இந்தியாவை வெல்வது எங்களால் இயலாத காரியம் இல்லை என்று வீரவசனம் பேசிய வங்கதேச கேப்டன் சொன்னது மாதிரியே முதலில் பேட்டிங் செய்து 264 ரன்கள் தனது அணிக்கு எடுக்க வைத்து அசத்தினார்.
265 ரன்கள் இலக்கு என்பதால் போட்டி முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பிவிட்டது.
வாய் பேசிய அளவுக்கு வங்கதேச வீரர்களின் பந்து பேசவில்லை. படுமோசமாக பந்துவீசிய வங்கதேச அணியினரால் இந்தியாவின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. இந்திய அணி 40.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 123 ரன்களும், விராத் கோஹ்லி 96 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது.