தொடரை கைப்பற்றியது இந்தியா. சொந்த மண்ணில் ஜிம்பாவே மீண்டும் தோல்வி
ஜிம்பாவேயில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றியது.
நேற்று ஹராராவேயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை இந்தியா தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி, 34.3 ஓவர்களி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.
127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றிய இந்திய அணியின் சாஹால் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இருநாடுகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.