இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
இலங்கை மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று கண்டியில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 236 ரன்கள் எடுத்தது. ஸ்ரீவர்தனா 58 ரன்களும், கபுகேந்திரா 40 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் பூம்ரா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த நிலையில் இரண்டாம் பாதியில் மழை குறுக்கிட்டதால் 47 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நல்ல ஓப்பனிங் கொடுத்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. ஒருகட்டத்தில் 108 ரன்கள் எடுத்து விக்கெட்டே விழாமல் இருந்த நிலையில் திடீரென மடமடவென விக்கெட்டுக்களை பறிகொடுத்து 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது.
இந்த நிலையில் தோனி-புவனேஷ்குமார் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது இறுதியில் இந்திய அணி 44.2 ஓவர்களில் 231 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அனி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் உள்ளது.