இந்தியா ஒருபோதும் சமிப்புத்தன்மை இன்மையை பொறுத்துக் கொள்ளாது. மோடி
கடந்த வருடம் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றபின்னர் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக பெருவாரியான எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பல அறிஞர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பியளித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா ஒருபோதும் சமிப்புத்தன்மை இன்மையை பொறுத்துக் கொள்ளாது என்று கூறியுள்ளார்.
மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களை நேற்று சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவிற்கு நிரந்தர இடம் அளிக்க இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.
இந்திய பிரதமருடன் பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதித்ததாக கூறிய அவர், இந்தியாவுடன் மிகப் பெரிய நட்பு நாடாக இங்கிலாந்து திகழும் என கூறினார். அமெரிக்காவை விட, இந்தியாவில் பிரிட்டன் அதிக முதலீடு செய்துள்ளதாகவும், இருநாடுகளுக்கு இடையேயான உறவு பல்வேறு துறைகளில் மேம்பட்டு வருவதாகவும், இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, “சகிப்புத் தன்மை இன்மையை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என கூறினார்.
English Summary: India won’t tolerate intolerence said Modi in England