சீன எல்லையில் கூடாரம் அமைத்த இந்திய ராணுவம்! பதட்டம் நீடிப்பு

சீன எல்லையில் கூடாரம் அமைத்த இந்திய ராணுவம்! பதட்டம் நீடிப்பு

கடந்த சில வாரங்களாகவே இந்தியா, சீனா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே பதட்டமான சூழல் இருந்து வருகிறது.

இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமிப்பு செய்த சீனா, அங்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கியது. சீனாவின் இந்த பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களைக் குவித்தது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சீனா, இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும், இல்லையேல் ராணுவ நடவடிக்கை எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளது. இதனால், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்நிலையில், டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவம் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளது. இதனால் இருநாடுகளுக்கு இடையே பதட்டநிலை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Leave a Reply