இந்திய ராணுவத்தில் ஜட்ஜ்மென்ட் அட்வகேட் ஜெனரல் துறையில் பணியில் சேருவதற்கான ஷார்ட் சர்வீஸ் கமிஷன் ஜேக் நுழைவுத் திட்டம் 17-வது கோர்சுக்கு சட்டத்துறையில் பி.எல் அல்லது எல்எல்பி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 14
ஆண்கள் – 10.
பெண்கள் – 04.
வயது வரம்பு: 01.07.2016 தேதியின்படி 21 – 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 1989 ஜூலை 2 ஆம் தேதிக்கு முன்னரோ, 1995 ஜூலை 1 ஆம் தேதி பின்னரோ பிறந்திருக்கக் கூடாது.
தகுதி: பட்டப் படிப்புக்கு பின்னர் 55 சதவீத மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 ஆண்டு எல்எல்பி பட்டம் அல்லது பிளஸ் 2க்கு பின்னர் 55 சதவீத மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 5 ஆண்டு எல்எல்பி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய அல்லது மாநில பார்கவுன்சிலில் பதிவு செய்யும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உளவியல் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெயினிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.21,000 வழங்கப்படும். பயிற்சிக்குப் பின்பு ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பிரிவில் லெப்டினென்ட் அந்தஸ்தில் நியமிக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வின்போது பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.