4 கைகள், 4 கால்களுடன் பிறந்த அபூர்வ குழந்தை. கடவுள் அவதாரமா?

baby with 4 legsமேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு நான்கு கைகள், நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை கடவுளின் அவதாரம் என அப்பகுதியின் பொதுமக்கள் கருதுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.,

இந்து கடவுள்களுக்கு பல கைகள் இருக்கும்படியான புகைப்படங்கள் மற்றும் சிலைகளை நாம் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இந்த குழந்தை கடவுளின் அவதாரமாகவே கருதுகின்றனர்.

இந்த பகுதியை  சேர்ந்த 67 வயது சுக்கோராவ் என்பவர் கூறும்போது “அவதாரம் எடுக்கும் கடவுள்களுக்கு மட்டுமே இரண்டுக்கும் மேற்பட்ட கைகளும் கால்களும் இருக்கும். எனவே இந்த குழந்தையை நாங்கள் கடவுள் அவதாரமாகவே கருதுகிறோம்” என்றார்.

ஆனால் இந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருவில் இருக்கும்போது இரட்டை குழந்தை உருவாகி பின்னர் மருத்துவ குறைபாடு காரணமாக இதுபோன்ற குழந்தைகள் அரிதாக பிறப்பதுண்டு என்று கூறியுள்ளனர்.

இந்த அபூர்வ குழந்தையை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

Leave a Reply