இந்தியாவின் தரமான நகரங்கள் பட்டியல்: சென்னைக்கு எந்த இடம்?
குடியுரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான ஜனகிரஹா மையம் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள நகரங்களின் தரம் குறித்து பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக தலைநகர் சென்னைக்கு 19வது இடம் கிடைத்துள்ளது.
மாநகரங்கள் பற்றியும், நிர்வாகம், சுகாதாரம்,சட்டம் ஒழுங்கு, கொள்கைகள், செயல்பாடு, உள்ளிட்ட பிற வசதிகள் குறித்தும் கேட்கப்பட்ட 89 கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது புனே. இந்த நகரன் 5.1 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. 3.3 மதிப்பெண்களுடன் சென்னை 19-வது இடத்திலும், 3 மதிப்பெண்களுடன் பெங்களூரு கடைசி இடத்தையும் பிடித்தது.
புனேவை அடுத்து மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா, கேரளாவின் தலைநககர் திருவனந்தபுரம், ஒடிசாவின் தலைநகர்ம் புவனேஷ்வர் நகரம் ஆகியவை 2,3 மற்றும் 4வது இடங்களையும் டெல்லி 6வது இடத்திலும், ஹைதராபாத் 8-வது இடத்திலும், மும்பை 9-வது இடத்திலும் உள்ளன.
மேலும், இந்த அறிக்கையில், இந்திய நகரங்கள் எந்த அளவுக்கு மிக பலவீனமான நகர திட்டமிடலில் இருக்கின்றன, எவ்வாறு தீர்வு காண்பது, திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஸ்திரத்தன்மை, நிர்வாக பிரச்சினைஅதற்கான தீர்வுகளையும் இந்த ஆய்வு அளித்துள்ளது.