சென்னை துறைமுகத்தில் மோதிய கப்பல் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

சென்னை துறைமுகத்தில் மோதிய கப்பல் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை இரண்டு சனிக்கிழமை இரண்டு கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒரு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது. ஆயிரக்கணக்கான லிட்டர் கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்ததால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சுற்றுப்புற சுகாதார துறை புகார் அளித்துள்ளது.

இதனை அடுத்து இரண்டு கப்பல்களின் உரிமையாளர்களுக்கு இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நோட்டீசுக்கு அவர்களிடம் இருந்து வரும் பதிலை அடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயால் ஏற்பட்ட எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply