பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு மற்றும் கப்பல்படையில் பணி

download (1)

இந்திய பாதுகாப்பு மற்றும் கப்பல்படையில் காலியாக உள்ள 375 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அறிவிப்பு எண்.11/2015-NDA-II 

தேதி: 26.06.2015

காலியிடங்கள் விவரம்:

1. தேசிய பாதுகாப்பு அகாதமி – 320

a. இராணுவம் – 208

b. கடற்படை – 42

c. விமானப்படை – 70

2. கப்பல்படை அகாதமி – 55

வயது வரம்பு: 02-01-1997 – 01-01-2000க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மாநில கல்வி வாரியம் அல்லது தேசிய பாதுகாப்பு கல்வி இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உளவியல் திறனறியும் தேர்வு, புலனாய்வு & ஆளுமை சோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஏதாவதொரு எஸ்பிஐ கிளையில் ரொக்கமாகவோ அல்லது பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், இந்திய ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், திருவாங்கூர் பாட்டியாலா வங்கிகளின் விசா, மாஸ்டர் கிரிடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி செலுத்தலாம்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2015

ஆஃப்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.07.2015

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.07.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.09.2015

தேர்வு முடிவுகள் டிசம்பர் 2015-ல் வெளிடப்படலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/exams/notifications/2015/NDA_II_2015/NDA&NA%20EXAM-II,%202015%20-%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply