‘அம்மா மருந்தகம்’ பாணியில் நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள். மத்திய அமைச்சர் தகவல்

medicineதமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் மலிவு விலையில் மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘அம்மா மலிவு விலை மருந்தகம்’ ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 3 ஆயிரம் மலிவு விலை மருந்தகங்கள்  திறக்கப்படவுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் இன்று ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்குப்  பேட்டியளித்த அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அவர்கள் கூறியுள்ளார்.

” ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், MRP விலையில் இருந்து 20-30 மதிப்பில் மருந்து, மாத்திரைகளை விற்கும் ’ஜன் ஔஷாதி’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள் , வட்டார அளவிலான சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில் இனம் சார்ந்த பொது மருந்துகளை  விற்பனை விலையில் 20-30 சதவீத விலைக்கு  விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவுள்ள இந்த திட்டத்தின் முதல்கட்டமாக நாடு முழுவதும் 3 ஆயிரம் ’ஜன் ஔஷாதி’ மருந்துக்கடைகள் தொடங்கப்படும் என்றும் பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கையை அதிகரித்து, வரும் 5 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் கடைகள் திறக்க முடிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மலிவு விலை மருந்தகங்களை தொடங்குவதற்கு மருந்தாளுநர் பட்டயம், பட்டம் மற்றும் முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கும், நல்ல பின்னணி கொண்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இந்தக்  கடைகளுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் ’ஷோ-கேஸ்’ வாங்குவதற்கு ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பில் இரண்டு முதல் இரண்டரை லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்”  என்று அவர் கூறினார்.

Leave a Reply