வருகிற திங்கட்கிழமை மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியான சிறிது நேரத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.
ஆப்கன் அதிபர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்லக்கூடாது என்று வலியுறுத்தியே இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவமும் அந்நாட்டு பிரதமருக்கு இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே விழாவில் கலந்துகொள்ள தமிழக தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே ராஜபக்சேவின் வருகையும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சீனா பெயரளவிற்கு மோடிக்கு வாழ்த்து மட்டும் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது.
சுற்றியுள்ள நாடுகளின் எதிர்ப்புகளை சமாளித்து இந்தியாவை சுமூகமாக ஆட்சி நடத்துவது மோடிக்கு பெரும் சவாலாக இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.