சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறந்த திரை ஆளுமைக்கான சிறப்பு நூற்றாண்டு விருது. மத்திய அரசு அ

rajinikanthஇந்திய சினிமா நூற்றாண்டு விழா வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 11 நாட்கள் கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சூப்பர் ஸ்டர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டின் “சிறந்த திரை ஆளுமைக்கான சிறப்பு நூற்றாண்டு விருது”வழங்கப்படுவதாக மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அறிவித்துள்ளது.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் உள்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி நடிகர்கள் கலந்துகொள்கிறார்கள். இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை ராஜாங்க மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

‘பிரதமர் நரேந்திர மோடியுடனான நெருக்கம் காரணமாகவே, ரஜினிக்கு இந்த விருது கொடுக்கப்பட்டதாகவும் அமிதாப்பச்சன் இந்த விழாவில்  தலைமை விருந்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுவதை மத்திய மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மறுத்துள்ளார்.

முற்றிலும் திறமை அடிப்படையில்தான், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டதாகவும்  நரேந்திர மோடி அரசில் எதுவும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply