நியூசிலாந்து: மிகப்பெரிய கொள்ளையை தடுக்க உதவிய 6 வயது இந்திய சிறுமி

நியூசிலாந்து: மிகப்பெரிய கொள்ளையை தடுக்க உதவிய 6 வயது இந்திய சிறுமி

1நியூசிலாந்து நாட்டில் உள்ள ஒரு கடையில் நடந்த மிகப்பெரிய கொள்ளையை இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 வயது சிறுமி தனது சமயோசித புத்தியால் தடுத்து நிறுத்தியுள்ளார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுகைல் படேல் என்பவர் எலெக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென முகமூடி கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்து வந்தனர். தடுக்க வந்த கடை ஊழியர்களை அவர்கள் கோடாரியால் தாக்கினர்.

இந்நிலையில் கடை உரிமையாளர் சுகைல் படேலின் 6 வயது மகள் சாரா படேல் திடீரென கொள்ளையர்களில் ஒருவனின் காலை வாரிவிட்டார். இதனால் நிலைகுலைந்த கொள்ளையன் தலைகுப்புற கீழே விழுந்தான். இதனால் கொள்ளையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற கொள்ளையர்கள் உடனே கொள்ளையடித்த பணத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருவதால் சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply