உலக அழகி போட்டியில் இந்திய அழகிக்கு எத்தனையாவது இடம்?

உலக அழகி போட்டியில் இந்திய அழகிக்கு எத்தனையாவது இடம்?

நேற்று நடைபெற்ற உலக அழகி போட்டியில் ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது இளம்பெண் உலக அழகி பட்டம் வென்ற நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி என்பவருக்கு 17வது இடமே கிடைத்துள்ளது.

டெல்லியில் வசித்து வரும் பிரியதர்ஷினி, சமூகவியல் படிப்பை படித்து கொண்டிருக்கின்றார். இதற்கு முன்னர் இந்தியாவின் சார்பில் பிரியங்கா சோப்ரா கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். அதற்கு முன்பாக ரீட்டா பரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டையானா ஹைடன்(1997) மற்றும் யுக்தா முகே ஆகியோர் உலக அழகி பட்டங்களை வென்றுள்ளனர்.

இந்த ஆண்டும் பிரியதர்ஷினி உலக அழகி பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு 17வது இடம் கிடைத்தது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Leave a Reply