இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கமா? வெங்கையா நாயுடு விளக்கம்

ltteசமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகள் மீதான தடைகள் நீங்கிய நிலையில் இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு இதுவரை எவ்வித ஆலோசனையும் செய்யவில்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசும்போது, ”ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கியுள்ளது குறித்து செய்தியை அறிந்தேன். இருந்தபோதிலும், அந்த அமைப்பின் மீதான தடையை இந்தியாவில் நீக்குவது குறித்து மத்திய அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை. இதுகுறித்த ஆலோசனையை நடத்தவும் மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை.

மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்றும் ஜாமீன் குறித்து செய்தியாளர்கள் கேட்டபொது, “சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply