ஒரு திருமணத்தையே நிறுத்திய சாதாரண கூட்டல் கணக்கு. உ.பி மாநிலத்தில் பரபரப்பு.

maths சாதாரண கூட்டல் கணக்கு கேள்விக்கு பதில் தெரியாத மணமகனை மணமேடையிலேயே மணமகள் உதறிய சம்பவம் ஒன்று சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் உள்ள ரசூல்பாத் கிராமத்தில் கடந்த புதன்கிழமை ஒரு திருமணம் நடைபெற இருந்தது. மணமகன் நன்கு படித்தவர் என்று மணமகள் வீட்டாரிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால் மணமகளுக்கு திடீரென சந்தேகம் வந்து தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்பு மணமகனிடம் 15ஐயும் 6ஐயும் கூட்டினால் என்ன விடை வரும் என்று கேட்டுள்ளார்.

இந்த கணக்கிற்கு விடை தெரியாமல் திருதிரு என்று விழித்த மணமகன் பின்னர் சுதாரித்து கொண்டு 17 என்று பதில் கூறியுள்ளார். மணமகனின் பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் ‘மணமகன் நன்கு படித்திருப்பதாக தன்னிடம் பொய் கூறியுள்ளதாகவும், ஒரு சிறிய கணக்குக்கு கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இந்த கணக்குக்கு 1-ம் வகுப்பு குழந்தைகூட பதில் சொல்லிவிடும். படிப்பறிவில்லாததால் மணமகணை ஏற்க விருப்பமில்லை என்று கூறி மணமேடையில் இருந்து எழுந்து வெளியேறினார்.

இவ்விவகாரத்தில் மணமகன் வீட்டார் பொய்யுரைத்துள்ளனர். எனவே திருமணத்தை புறக்கணிக்கிறோம்” என்று மணமகளின் தந்தை மொஹர் சிங் அவர்களும் கூறியதால் இந்த திருமணம் நின்றுவிட்டது. ஒரு சிறிய கணக்கால் ஒரு திருமணம் நின்றது குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்புடன் உள்ளனர்.

Leave a Reply