Indian Institute of Management (IIMs) எனப்படும் இந்திய மேலாண்மைக் கழகங்கள் இந்தியாவின் கௌரவமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். மேலாண்மை சார்ந்த கல்வியை வழங்குவதோடு, ஆய்வுகள் மேற்கொள்வது, இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் மேலாண்மை தொடர்பான கருத்துரைகள் வழங்குவது போன்ற பணிகளையும் இக்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. மேலாண்மை படிப்புகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இப்படிப்புகள் பற்றி விவரிக்கிறார் கல்வியாளரும் ‘ஸ்டூடன்ட்ஸ் விஷன் அகாடமி’யின் இயக்குனருமான ஆர்.ராஜராஜன்.
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி, பெங்களூரு, கோழிக்கோடு, விசாகப்பட்டினம், அகமதாபாத், அமிர்தசரஸ், புத்தகயா, கொல்கத்தா, இந்தூர், காஷிப்பூர், லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், ஷில்லாங், உதய்பூர் உள்பட்ட இடங்களில் இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இக்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் மேலாண்மைப் படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. தவிர இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் மிகுந்த முக்கியத்துவம் தந்து இக்கல்வி நிறுவன மாணவர்களை பணிக்கு அழைக்கின்றன. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை Common Admission Test (CAT) என்ற நுழைவுத்தேர்வு மூலம் நடக்கிறது.
இந்திய மேலாண்மைக் கழகங்களில் வழங்கப்படும் படிப்புகள்
* Post-Graduate Programme in Management (PGP)
* Executive Education Programme (EEP)
* Post-Graduate Programme in Food and Agribusiness Management (PGP-FABM)
* One Year Post-Graduate Programme in Management for Executives (PGPX)
* Post Graduate Programme in Public Policy & Management (PGPPM)
* Post Graduate Programme in Enterprise Management (PGPEM)
* Executive Education Programme (EEP)
* Post-Graduate Programme for Executives for Visionary Leadership in Manufacturing (PGPEX-VLM)
* Post Graduate Programme in Human Resources Management (PGPHRM)
(அனைத்து படிப்புகளும் MBA படிப்புக்கு இணையானது)
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாணவர்கள் இளநிலைப் படிப்பில் குறைந்தது 50 விழுக்காடும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவு மாணவர்கள் 45 விழுக்காடும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 35 விழுக்காடும், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடும் இட ஒதுக்கீடு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை www.iimcat.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 20.9.2015.
தேர்வு நடைபெறும் நாள் 29.11.2015.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினர் மற்றும் நான்-கிரிமிலேயர், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.1600. SC/ST மாற்றுத்திறனாளி பிரிவு மாணவர்களுக்கு ரூ.800.
தேர்வு முறை:
Common Admission Test என்பது ஒரு ஒருங்கிணைந்த தேர்வு முறையாகும். எழுத்துத் தேர்வு இதன் ஒரு அங்கம். அனைத்து இந்திய மேலாண்மைக் கழகங்களுக்கும் இந்த எழுத்துத் தேர்வு பொதுவானது. சில கழகங்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் குழு கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை இறுதி செய்கின்றன.
இத்தேர்விற்கான ஸ்கோர் கார்டு மேற்கண்ட இணையதளத்தில் 2016 ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகும். இந்த மதிப்பெண்ணை டிசம்பர் 31, 2016 வரை பயன்படுத்த முடியும்.
தேர்வில் குவாண்ட்டிடேட்டிவ் எபிலிட்டி, டேட்டா இண்டர்பிரட்டேஷன், லாஜிக்கல் ரீசனிங், வெர்பல் ரீசனிங், ரீடிங் கான்பிரிஹென்சன் போன்ற பிரிவுகள் சார்ந்து வினாக்கள் இருக்கும். மூன்று மணி நேரம் இத்தேர்வு நடக்கும்.
மாதிரி வினாத்தாள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது, CAT Centre 2015, C/O Admissions Office, Indian Institute of Management Ahmedabad, Vastrapur, Ahmedabad-380015, Gujarat, India என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
தொலைபேசி எண்- 079-66324633/34.
இ.மெயில் முகவரி: cat2015@iimahd.ernet.in.
நினைவில் கொள்க
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.9.2015
அட்மிட் கார்டு பதிவிறக்கம்: 15.10.2015
தேர்வு நடைபெறும் நாள்: 29.11.2015
ஸ்கோர் கார்டு பதிவிறக்கம்: 2016 ஜனவரி 2வது வாரம்