கரும்பலகையில் கணினி வரைந்த ஆசிரியருக்கு இந்திய நிறுவனம் நிறுவனம் வழங்கிய கம்ப்யூட்டர்கள்
சமீபத்தில் கானா என்ற நாட்டில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர், அந்த பள்ளியில் கம்ப்யூட்டர் இல்லாததால், கரும்பலகையில் கம்ப்யூட்டரில் உள்ள எம்.எஸ். ஆபீஸ் பாடத்தை படம் வரைந்து பாடம் நடத்தினார்.
இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியது. கம்ப்யூட்டர் இல்லாவிட்டாலும் மாணவர்களுக்கு அதை சொல்லிக்கொடுக்கும் அந்த ஆசிரியரின் ஆர்வத்தை உலகெங்கிலும் உள்ளவர்கள் பாராட்டினார்கள்.
இந்த நிலையில் இந்திய ஐ.டி. ஒன்று கானாவில் உள்ள அந்த பள்ளிக்கு 5 கம்ப்யூட்டர்கள், 1 லேப் டாப் வழங்கியுள்ளது. இதுகுறித்து அக்ராவில் உள்ள அந்த ஐடி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை நாங்கள் பார்த்தோம். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விவகாரத்தில் ஆசிரியரின் அர்ப்பணிப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம். ஒரு ஐ.டி. பயிற்சி நிறுவனமாக நாங்கள் அந்த பள்ளிக்கு உதவி செய்ய முடிவு செய்தோம் என கூறினார்