சீனியர் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு! வேலை பறிபோகும் அபாயம்

சீனியர் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு! வேலை பறிபோகும் அபாயம்

லட்ச லட்சமாக கையில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த ஐடி பணியாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே போதாத காலமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே ஐடி ஊழியர்களின் பணியும் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது.

இந்த நிலையில் ஐடி துறை உலகம் முழுவதும் சரிந்து வருவதை அடுத்து செலவை குறைக்கும் வகையில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்னணி ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த சீனியர் பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிகிறது.

காக்னிஸன்ட் நிறுவனத்தில் மட்டும் சுமார் 6000 ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் என்றும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 1000 பேர் வேலையை இழக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலதிகாரிகளின் அறிக்கையைப் பெற்று நீக்கப்படும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகு என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply