பெண் ஊழியரை நிர்வாணப்படம் எடுத்த இந்தியர். நாட்டை விட்டு விரட்ட துபாய் நீதிமன்றம் தீர்ப்பு.

dubai courtதுபாயில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் பணிபுரியும் இந்திய இளைஞர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர் ஒருவர் உடைமாற்றும் போது ரகசியமாக அவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, தன்மீது சாட்டப்பட்ட குற்றத்தை தான் ஒப்புக்கொள்வதாகவும், தன்னை மன்னித்து விடுதலை செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரை மன்னிக்க மறுத்த துபாய் நீதிமன்றம் அவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை கொடுத்து தீர்ப்பு அளித்தது. மேலும் தண்டனை காலம் முடிந்தவுடன் அவரை நாட்டில் இருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது.

23 வயதான அந்த இந்திய வாலிபர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 32 வயது பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply