பாபர் மசூதி இடிப்புக்கு இந்தியாவை பழிவாங்குவோம். ஐ.எஸ்.தீவிரவாதிகள் சபதம்

பாபர் மசூதி இடிப்புக்கு இந்தியாவை பழிவாங்குவோம். ஐ.எஸ்.தீவிரவாதிகள் சபதம்

isisiஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தீவிரவாதம் செய்து வரும் ஐ.எஸ். இயக்கம் தற்போது இந்தியாவை குறி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு மற்றும் காஷ்மீர், குஜராத்தில் நடந்த முஸ்லிம்கள் படுகொலைக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சுமார் 20 நிமிடங்கள் ஓடுகிறது. இந்த வீடியோவில் தானியங்கி துப்பாக்கியுடன் இந்தியாவை சேர்ந்த சில ஐ.எஸ். தீவிரவாதிகள் அராபிய மொழியில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் பேசியதாவது: ‘கையில் வாளுடன் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வருவோம். பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீர், குஜராத் மற்றும் முசாபர்நகரில் நடந்த முஸ்லிம்கள் படுகொலைக்கு பழிக்குப்பழி வாங்குவோம்’ என்று சபதமேற்கிறான்.

மற்றொரு தீவிரவாதி பேசியபோது, “கடந்த 2008-ம் ஆண்டு டெல்லி, ஜாமியாநகர் பாட்லா ஹவுஸ் பகுதியில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகள்மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் தப்பி, உயிர் பிழைத்துவந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும் இந்தியாவில் உள்ள இந்துக்கள் உங்களை மதம்மாற்றி விடுவார்கள். எனவே, நீங்கள் அனைவரும் இந்தியாவைவிட்டு சிரியாவுக்கு வந்து ‘ஜிஹாத்’ என்னும் புனிதப்போரில் குதிக்க வேண்டும்’ என்றும் பேசியுள்ளான்.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply